Posts

பாடம் 3 ஒரே தேவனா அல்லது மூன்று தேவனா?

பாடம் 3 : ஒரே தேவனா அல்லது மூன்று தேவனா ?      கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே மீண்டுமாக இந்த வேத வகுப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் கடந்த பாடத்தில் வானத்திலேயும் பூமியிலேயும் யார் யாரெல்லாம் தேவர்கள் என்பதைப்பற்றியும் , தேவனுடைய குமாரனாகிய இயேசுவை வேதம் அநேக இடங்களில் தேவன் என்று ஏன் சொல்லுகிறது என்பதைப்பற்றியும் பார்த்தோம் , இப்பொழுது நாம் இயேசுவுக்கும் மேலான ஒரு தேவன் உண்டு என்பதைபற்றி பார்க்கப்போகிறோம். நாம் கடந்த பாடத்தை நினைவு கூறுவோம். அதில் இயேசுவானவரோ அல்லது தூதனோ அல்லது மோசேயோ எவர்களும் தங்களுடைய சுய வார்த்தைகளை நமக்கு போதிக்கவில்லை இவர்களுக்கு போதித்தவர் எவைகளை சொன்னாரோ அவைகளைத்தான் போதித்தார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. உதாரணமாக இயேசுவானவர் சொல்லுகையில் யோவான் 12:49. நான் சுயமாய்ப் பேசவில்லை , நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். யோவான் 12:50. அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன் ; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பித...

பாடம் 1 திரித்துவம் என்பது என்ன?

பாடம் 1 திரித்துவம் என்பது என்ன? கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். இப்பொழுது நீங்கள் படிக்க நினைக்கும் பாடமானது உலகின் கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் பிளவை ஏற்படுத்தும் ஒரு பாடமாகும். ஆம் காரணம் ஒரு சில கிறிஸ்தவர்கள் பிதா குமாரன் பரிசுத்த ஆவி இம்மூவரும் ஒருவர் அதாவது திரித்துவ தேவன் என்று போதிக்கிறார்கள் வேறு சிலர் இம்மூவரும் தனித்தனி நபர் என்று போதிக்கிறார்கள். இதினால் பல கிறிஸ்தவர்கள் பெரும் குழப்பத்தினால் தவிக்கிறதை நாம் பார்க்கிறோம். இந்த இரண்டு பிரிவினரும் வசனத்தை கொண்டு பேசுவதினால் மக்கள் எந்த பிரிவினரிடம் போதனையை கேட்கிறார்களோ அதுவே சரியான போதனை என்று உடனேயே முடிவு செய்து விடுகிறார்கள் இதுதான் முக்கியமான பிரச்சனை. இந்த குழப்பத்திலிருந்து நீங்கள் ஒரு முடிவு காணவேண்டுமா? அதற்கு ஒரே வழிதான் உண்டு, அது என்னவென்றால் நீங்கள் இரு பிரிவினரின் போதனையையும் கேட்கவேண்டும். அப்பொழுதுதான் எது சரியான போதனை என்பதை கண்டுபிடிக்க முடியும்.  எரேமியா 6:  16. வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவைய...